அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு ராமேஸ்வரத்தில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து செல்கிறார் பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2024 01:01
சென்னை; பிரதமர் நரேந்திர மோடி, ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க , சென்னைக்கு நாளை மாலை வருகிறார். அன்று இரவு, சென்னை கிண்டி ராஜ்பவனில் தங்கும் மோடி, அடுத்த நாள் திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், ஜன. 22ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, 12ம் தேதியில் இருந்து பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டு வருகிறார். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்தார். மதியம் 12:55 மணிக்கு திருச்சியிலிருந்து ஹெலிகாப்டரில்ராமேஸ்வரம் புறப்படுகிறார். மதியம் 2:00 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் அவர் ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச்செல்கிறார். பிரதமர் வருகை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.