அயோத்தி ராமஜென்ம பூமியில் ஆச்சார்யவர்ணம் ; தலைமை அர்ச்சகருக்கு மரியாதை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2024 05:01
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ல் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்துக்கான சடங்குகள் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாடே விழா கோலம் பூண்டுள்ளது. இதற்காக இன்று ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டா விழாவை முன்னிட்டு, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸின் ஆச்சார்யவர்ணம் சடங்கை சுவாமி சுனில் தாஸ் நிகழ்த்தினார்.
ஆச்சார்யவர்ணம் என்பது கும்பாபிஷேகத்தின் பொருட்டு கிடைக்கும் அனைத்து பொருட்களில் ஒரு பகுதி கட்டிட பணிகளுக்கும்,ஒரு பகுதி நித்திய, மாதாந்திர,விஷேட நட்சத்திர பூஜை உற்சவத்திற்கும், மூன்றாவது பாகம் ஆபரணங்களுக்கும் செலவிடப்படும். கும்பாபிஷேகத்தை தலைமை ஏற்று நடத்தும் தலைமை குருவை வணங்கி மேற்கண்ட செல்வத்தைக் கொண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி தர வேண்டும் என கேட்டுக் கொள்வது ஆச்சார்ய வர்ணமாகும். இத்தகைய சிறப்பு மிக்க ஆச்சார்யவர்ணம் என்பது பிரான் பிரதிஷ்டைக்கு முன் ஒரு முக்கியமான சடங்கு ஆகும், தலைமை அர்ச்சகருக்கு விழாவை நடத்துவதற்கு சக்தியையும் வலிமையையும் அளிக்கும் வகையில் கௌரவிக்கப்படுகிறார். இவ்வாறு ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸின் ஆச்சார்யவர்ணம் சடங்கை சுவாமி சுனில் தாஸ் நிகழ்த்தினார்.