அயோத்தி ராமர் கோவிலில் ஜல யாத்திரை, தீர்த்த பூஜை; எங்கும் ஒலித்த ராம கோஷம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2024 07:01
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ல் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் நேற்று (18ம் தேதி) ஜல யாத்திரை, தீர்த்த பூஜை, கந்தாதிவாஸ் பூஜைகள் நடைபெற்றது. அயோத்தி ராமர் ஜென்மபூமியில் அமைந்துள்ள ராமர் கோவிலுக்குள் இன்று மதியம் 1:20 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க ராமர் சிலைக்கு நீர் விசர்ஜனம், ஜல யாத்திரை, தீர்த்த பூஜை, கந்தாதிவாஸ் பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமகோஷம் முழங்க வழிபட்டனர். நாளை 19ம் தேதி கேசராதிவாஸ், கிருதாதிவாஸ், ஔஷததிவாஸ், குந்த்பூஜன் மற்றும் பஞ்சபூ சன்ஸ்காரம் ஆகியவை நடைபெறும். அன்று மாலை, தான்யாதிவாஸ் சடங்கு மற்றும் ஆரத்தி வழிபாடு நடைபெறுகிறது.