அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை; முதல் புகைபடம் வெளியானது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2024 08:01
அயோத்தி,: உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை வைக்கப்பட்டதன் முதல் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா 22-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து ஆகம, வேத சம்பிரதாயங்களின்படி கும்பாபிஷேகத்துக்கு முன்பான அயோத்தி கோவில் வளாகத்தில் ராமர் பிரவேசம் செய்வதை குறிக்கும் நிகழ்வாக கடந்த 17-ம் தேதி பால ராமர் விக்ரகத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நேற்று (ஜன.18) கருவறையில் வைக்கப்பட்டது. இச்சிலையை கர்நாடகாவின் மைசூரு சிற்பி அருண் யோகிராஜ் உருவாக்கியுள்ளார். பால ராமர் சிலை முகம் மஞ்சள் துணியால் மூடப்பட்ட முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.