Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று நவமி; ஸ்ரீராமஜெயம் கூறி ராமரை ... மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்; ஜன.21ல் கோலாகலம் மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் ஜாதகம்; பக்தியுடன் வழிபடுவோருக்கு இனி எல்லாம் சாதமாக மாறும்
எழுத்தின் அளவு:
ராமர் ஜாதகம்; பக்தியுடன் வழிபடுவோருக்கு இனி எல்லாம் சாதமாக மாறும்

பதிவு செய்த நாள்

19 ஜன
2024
10:01

சத்தியத்தையும் தர்மத்தையும் காப்பதற்காக விஷ்ணு எடுத்த அவதாரம் ராமாவதாரம். அவர் நவக்கிரகங்களை அழைத்து, ‘‘நான் பூவுலகில் ராமனாக அவதரிக்கப் போகிறேன். அதனால் நீங்கள் அனைவரும் ஆற்றல் மிக்க ராசிகளில் போய் அமருங்கள்’’ என்று உத்தரவி்ட்டார். அயோத்தி மன்னரான தசரதர் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தின் பலனாக பூமியில் அவதரித்தார்.

அப்போது குரு, சுக்கிரன், சூரியன், சனி செவ்வாய் ஆகிய ஐந்தும் உச்ச பலமும், சந்திரன் ஆட்சி பலமும், புதன் சூரியனோடும், ராகு கேது மறைவு ஸ்தானங்களிலும் அமர்ந்தனர். ராமரின் பிறந்த ஜாதகத்தை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பு.  
சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று பகல் உச்சிப் பொழுதில் ராமர் பிறந்தார். சித்திரையில் சூரியன் உச்சவீடான மேஷ ராசியில் சஞ்சரிப்பார். இதனால் தைரியம், ஒழுக்கம், கவுரவம், செல்வாக்குடன் திகழ்ந்தார் ராமர். பிதுர்காரகராகிய சூரியனின் பலத்தால் தந்தை மீது அன்பு மிக்க மகனாக வளர்ந்தார். சூரியனோடு புதனும் சேர்ந்து புதஆதித்ய யோகம் ஏற்பட்டது. இதனால் கல்வி, கலைகளில் சிறந்தவராக, விவேகம், புத்திசாலித்தனம் நிறைந்தவராக இருந்தார். நவமி திதியில் பிறந்ததால் தன் கவுரவத்தை நிலைநாட்டுவதில் அக்கறை கொண்டிருந்தார். துலாம் ராசியில் சனி உச்ச பலம் அடைந்ததால் தீர்க்காயுள் பெற்றவராக வாழ்ந்தார். சனியின் பார்வை சூரியன் மீது பட்டதால் தந்தையின் மரணத்திற்கு காரணமானார். அதே சனி, புதனையும் பார்த்ததால் காட்டுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. கடக லக்னத்தில் பிறந்ததால் நளினம், மென்மையான மனம் கொண்டிருந்தார். லக்னத்தில் குரு உச்ச பலமும், சந்திரன் ஆட்சி பலமும் பெற்றிருந்தனர். இதனால் பார்ப்பவரைக் கவரும் வசீகரத்துடன் இருந்தார்.  பத்தாம் பார்வையால் சனி லக்னம், குரு சந்திரனைப் பார்த்ததால், தாய் ஸ்தானத்தில் இருந்த கைகேயியே அவரது துன்பத்திற்கு காரணமாக அமைந்தாள்.  

மகர வீட்டில் செவ்வாய் உச்ச பலத்துடன் இருந்ததால் உடல், மனம் உறுதியும், பெருந்தன்மையும் இயல்பாக அவருக்கு இருந்தன. விஸ்வாமித்திரர் செய்த யாகத்தைக் காக்கவும், சுக்ரீவன், விபீஷணன் ஆகிய நல்லவர்களுக்கு உதவியும் செய்தார்.
களத்திரகாரனான சுக்கிரன் குருவின் வீட்டில் உச்சபலம் பெற்றதால், அழகும், நற்குணமும் கொண்ட சீதையை மனைவியாகப் பெறும் பாக்கியம் பெற்றார். களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்ததால், சுயம்வரத்தில் வில்லை ஒடித்து வெற்றி வீரனாக சீதையை மணந்தார். சனியின் வீடான மகரத்தில் இருந்த செவ்வாயால் மனைவியைப் பிரிந்தார். சுக்கிரன் குருவீட்டில் இருந்ததால், ராவணனால் சீதை கவரப்பட்டாலும், அவளுடைய கற்பு காப்பாற்றப்பட்டது. வித்யா ஸ்தானமான நான்கில் சனி இருந்ததால் வாழ்வு முழுவதும் ஞானியாக பற்றில்லாமல் வாழ்ந்தார். இன்று நவமி நன்னாளில் ராமர் ஜாதகத்தைப் பக்தியுடன் வழிபடுவோருக்கு கிரகதோஷம் நீங்குவதோடு வாழ்வில் இனி எல்லாம் சாதமாக மாறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாத ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில் ஏகாம்பரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar