பதிவு செய்த நாள்
19
ஜன
2024
11:01
மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஜன.,21ல் நடப்பதை முன்னிட்டு அன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜன.,21 காலை 8:00 முதல் 10:00 மணிக்குள் கும்பாபிேஷகம் நடக்கிறது. கோபுர வாசல் முன்புறம் தெற்கு, மேலமாட வீதி, வடம்போக்கித்தெருவில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, மதியம் 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு 7:00 மணிக்கு மாசி வீதிகளில் மக்கள் தரிசனத்திற்காக கருட சேவை நிகழ்ச்சி நடக்கும்.வாகனங்களுக்கு தடைமேலவடம் போக்கித்தெருவில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. பாண்டிய வேளாளர் வீதி, கோயில் பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்படுகிறது. தெற்குமாசி, மேலமாசிவீதிகளில் பக்தர்கள் டூவீலர்களை ரோட்டின் இடதுபுறமாக ஒரு வரிசையில் நிறுத்த வேண்டும். திருப்பரங்குன்றம் ரோட்டில் நேதாஜி ரோடு சந்திப்பு முதல் கிரைம் பிராஞ்ச் வரை ரோட்டின் கிழக்கு பகுதியில் டூவீலரை நிறுத்த வேண்டும்.
ரயில்வே ஸ்டேஷன், எல்லீஸ்நகர், அரசரடி பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் காரை தெற்குமாரட் வீதியிலும், தெப்பக்குளம், தெற்குவாசல் பகுதியில் இருந்து வருபவர்கள் தெற்கு வெளிவீதியிலும் நிறுத்த வேண்டும். பழங்காநத்தம் பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் மதுரைக்கல்லுாரி மைதானத்தில் காரை நிறுத்த வேண்டும் என போலீசார் அறிவித்து உள்ளனர்.