ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ராமர் கோயிலுக்கு புனித நீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2024 03:01
புதுடில்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா பீடத்தில் இருந்து புனித நீரை எடுத்து பிரிட்டன் வழியாக இந்தியாவிற்கு முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் அனுப்பி வைத்துள்ளார்
காஷ்மீர் சாரதா தேவி கமிட்டியை பாதுகாப்போம் என்ற அமைப்பை தோற்றுவித்த ரவிந்தர் பண்டிடா என்பவர் கூறியதாவது: தன்வீர் அகமது என்பவர்,ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா பீடத்தில் இருந்து புனீத நீர் எடுத்து சேகரித்துள்ளார். அதனை எங்களது அமைப்பை சேர்ந்தவர்கள், இஸ்லாமாபாத்திற்கு எடுத்து சென்று, அங்கிருந்து பிரிட்டனில் உள்ள தன்வீர் அகமதுவின் மகள் மக்ரீபிக்கு அனுப்பி வைத்தோம். அவர், அங்கிருந்து சோனல் ஷேர் என்ற காஷ்மீர் பண்டிட் மூலம் 2023 ஆக., மாதம் குஜராத்தின் ஆமதாபாத்திற்கு அனுப்பி வைத்தார். தற்போது, அந்த புனித நீர், டில்லி வந்தடைந்தது.
2019 புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே தபால் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், ஐரோப்பா சென்று இந்திய துணை கண்டத்திற்கு புனித நீர் வந்தடைந்தது. இந்த புனித நீர் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது பயன்படுத்தப்படுவது பெருமை அளிக்கிறது. இந்த புனித நீர், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நிர்வாகிகள் மூலம் ராமர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.