அனைத்து கண்களும் அயோத்தியை நோக்கி .. வீட்டில் விளக்கேற்றுவோம்.. ராமரை போற்றுவோம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2024 07:01
பல நுாற்றாண்டு, பல தலைமுறை முன்னோர்களின் எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது. சனாதன தர்மத்தின் ஆன்மாவான, ரகுநந்தன் ராகவ ராம லல்லா, பிறந்த அவத்புரியில் மிக பிரமாண்டமான, புனிதமான கோவிலில் இருந்து ஆட்சி புரிய உள்ளார். கடந்த, 500 ஆண்டுகளாக காத்திருந்த இந்த வரலாற்று மற்றும் புனிதமான நாள், நம் நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை, அனைத்து சாலைகளும் ஸ்ரீ ராம ஜென்மபூமியை நோக்கியே இருக்கும். அனைத்து கண்களும் மகிழ்ச்சியில் அயோத்தியை நோக்கயே உள்ளது. இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுவோம்.. ரகுநந்தனை போற்றுவோம்.. ஜெய்ஸ்ரீராம்..