Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனைத்து கண்களும் அயோத்தியை நோக்கி .. ... அயோத்தி கோவிலில் விஜயேந்திரர்; கோவில் உருவானதில் காஞ்சி மடாதிபதிகளின் பங்களிப்பு அயோத்தி கோவிலில் விஜயேந்திரர்; ...
முதல் பக்கம் » ஆன்மிகபூமி அயோத்தி » செய்திகள்
திரும்பிய பக்கமெல்லாம் ஒலிக்கும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்.. எங்கும் காவி.. மத்தாப்பூ பூத்த மகிழ்வுடன் மக்கள்
எழுத்தின் அளவு:
திரும்பிய பக்கமெல்லாம் ஒலிக்கும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்.. எங்கும் காவி.. மத்தாப்பூ பூத்த மகிழ்வுடன் மக்கள்

பதிவு செய்த நாள்

22 ஜன
2024
08:01

அயோத்தி சந்தோஷத்தாலும், பெருமிதத்தாலும் நிரம்பி வழிகிறது. மிகப்பெரிய திருவிழாவை எதிர்பார்த்து மக்கள் மனசெல்லாம் மத்தாப்பூ பூத்த மகிழ்வுடன் காணப்படுகின்றனர். அயோத்தியில் இருந்து, 12 கி.மீ., துாரத்தில் திறக்கப்பட்ட புதிய விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு பயணியர் வந்தவண்ணம் உள்ளனர்.

துறவியர், மடாதிபதிகள், சாதுக்கள் எல்லாம் மொத்தமாக அயோத்திக்கு வந்துவிட்டதால், அவர்களாலும், அவர்களது பக்தர்களாலும், தொண்டர்களாலும் எங்கும் காவி அணிந்தவர்களின் கூட்டமே காணப்படுகிறது. அவர்கள் எழுப்பும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் விண்ணைப் பிளக்கிறது. ராமர், அனுமன் மற்றும் ராமர் கோவில் உருவம் பொறித்த காவிக்கொடிகள் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது. அவரவர் வீடு, கடைகளில் ஒன்றுக்கு இரண்டாக இந்த கொடிகளை ஏற்றி வைத்து பெருமிதம் கொள்கின்றனர். இளைஞர்கள் தங்களது கைகளில் ராமர் படங்களை ஆர்வமாக பச்சை குத்திக் கொள்கின்றனர். சட்டென்று பார்த்தவுடன் சிறிய கோவிலோ என்று எண்ணும்படியாக உள்ளூர் பஸ் நிலையங்களை எல்லாம் ராமர் படங்களால் அலங்கரித்துள்ளனர். பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ கவச வாகனம் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு வாகனங்களின் ரோந்து எல்லா பக்கங்களிலும் நடக்கிறது. டிசம்பர் மாதம் முன்பனி என்றால், ஜனவரி மாதம் பின்பனி என்பர். இப்போது இந்த பின்பனி அதிகமாகவே உள்ளது. காலை, 10:00 மணி வரையிலும் பனிமூட்டம் காணப்படுகிறது. இருந்தாலும் நள்ளிரவில் கூட நகரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ராமர் கோவில் பணியில் ஒவ்வொருவரும் பெரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர். வருபவர்கள் அனைவருமே ராமரின் அருளை பெற்றுச் செல்லவேண்டும் என்பதால், விழாக்குழுவினர் அதற்கான ஏற்பாடுகளை பார்த்து பார்த்து செய்து வருகின்றனர்.

 
மேலும் ஆன்மிகபூமி அயோத்தி செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தரிசனம் செய்ய இன்று காலை ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடும் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்: அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் ராம் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டது முதல் தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
உத்தரப்பிரதேசம்; உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலை ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar