பதிவு செய்த நாள்
22
ஜன
2024
05:01
திருப்பரங்குன்றம்; அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் ராமருக்கு சிறப்பு யாகம் பூஜை நடந்தது.
கோயிலில் மூலவர் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்துப்படியாகி, யாகம் வளர்த்து பூஜை, தீபாராதனை நடந்தது. கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர்கள், உற்ஸவர்களான பட்டாபிஷேக ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்கள் முடிந்து மலர் அலங்காரமாகி பூஜை, தீபாராதனை முடிந்தது, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் மூலவர்கள் ராமர், சீதை, லட்சுமணனுக்கு, அபிஷேகங்கள் முடிந்து மலர் அலங்காரமானது. யாக பூஜை முடிந்து, ராம நாம அர்ஜனை நடந்தது. கோயில் முழுவதும் 1008 அகல் விளக்குகள் தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்களுக்கு ராம நாம புத்தகமும், நோட்டும் வழங்கப்பட்டது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* திருப்பரங்குன்றம் மகா வராஹி கோயிலில் மூலவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து 108 தீபம் ஏற்றப்பட்டது.
* அகில பாரத அனுமன் சேனா சார்பில் திருப்பரங்குன்றத்தில் ராமர் போட்டோ வைத்து தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
* பா.ஜ. ஒபிசி அணி சார்பில் திருநகரில் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ராமதாஸ், பாலன், ராக்கப்பன், வேல்முருகன், வெற்றிவேல்முருகன் கலந்து கொண்டனர்.