பழநி தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம்; குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2024 06:01
பழநி; பழநி கோவிலில் தைப்பூசத் திருவிழாவில் இன்று (ஜன.24ல்) பெரிய நாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.
பழநி தைப்பூசத் திருவிழா ஜன.,19ல் பெரியநாயகி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாள்களில் வெள்ளி ஆட்டுக்கடா, வெள்ளி காமதேனு, தந்த பல்லாக்கு, வெள்ளியானை, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். விழாவில் ஆறாம் நாளான இன்று (ஜன.24) முக்கிய நிகழ்ச்சியான வள்ளி,தெய்வ நாயகி அம்மன் சமேத முத்துக்குமார சுவாமி, திருக்கல்யாணம் சிம்ம லக்னத்தில் இரவு 7:00 மணிக்கு மேல் இரவு 8:00 மணிக்குள் நடைபெற்றது. இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஏழாம் நாளான நாளை (ஜன.,25 ல்) மாலை 4.30 மணிக்கு மேல் திருத்தேரில் சுவாமி ரத வீதிகளில் வலம் வருவார். பத்தாம் நாளான ஜன.28ல் மாலை 7:00 மணிக்கு தெப்பத்தேர் நடைபெற்று, இரவு 11:00 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் உற்ஸவம் நிறைவு பெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.