Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பஹரேஸ்வரர் கோவிலில்1008 பரத ... சிதைந்த பழமையான கோயிலில் புதைந்திருக்கும் வரலாறு சிதைந்த பழமையான கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சுருளி தெய்வம் உத்தரவுடன்.. காந்தாரா பட பாணியில் பூத கோல நடனம் ஆட இருவர் தேர்வு
எழுத்தின் அளவு:
பஞ்சுருளி தெய்வம் உத்தரவுடன்.. காந்தாரா பட பாணியில் பூத கோல நடனம் ஆட இருவர் தேர்வு

பதிவு செய்த நாள்

29 ஜன
2024
11:01

மங்களூரு: காந்தாரா திரைப்பட பாணியில், உண்மை நிகழ்வாக, பூத கோல நடனம் ஆட, இருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான, காந்தாரா திரைப்படம், கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் கிராமப்புற பகுதிகளில், கோவில் திருவிழாவின் போது, பாரம்பரிய பூத கோல நடனம் ஆடுவது பற்றிய, கதையை கருவாகக் கொண்டது. இந்த திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டியின் தந்தையாக நடித்தவர், பூத கோல நடனம் ஆடுவார். அவர் இறந்த பின்னர், நடனம் ஆடுவதற்கு, பஞ்சுருளி தெய்வம் முன்பு பிரசன்னம் பார்க்கும்போது, ரிஷப் ஷெட்டி தான் அதற்கு தகுதியானவர் என்று தெரியவரும். இதனால் ரிஷப் ஷெட்டி பூத கோல நடனம் ஆடுவார். இதுபோன்று உண்மை நிகழ்வு, தட்சிண கன்னடாவில் நடந்து உள்ளது. தட்சிண கன்னடாவின் கடபா எடமங்களா கிராமத்தைச் சேர்ந்தவர் கந்து அஜிலா. கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாக்களில், பூத கோல வேஷமிட்டு நடனம் ஆடுவார். சில மாதங்களுக்கு முன்பு, கோவில் திருவிழாவில் பூத கோல நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். கந்து அஜிலா இறந்த பின்னர், யாரை பூத கோல நடனம் ஆட வைப்பது என்று தெரியாமல், கிராம மக்கள் யோசித்தனர். கந்து அஜிலாவின் மகன்கள் மோனப்பா, தினேஷிடம் பூத கோல நடனம் ஆடும்படி கிராம மக்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் பஞ்சுருளி தெய்வம் உத்தரவு கொடுத்தால் தான், நடனம் ஆடுவதாக தெரிவித்தனர். இதனால் பஞ்சுருளி தெய்வம் முன், பிரசன்னம் பார்த்தபோது, மோனப்பாவும், தினேஷும் பூத கோல நடனம் ஆட உத்தரவு கிடைத்தது. இனி நடக்கும் திருவிழாக்களில், அவர்கள் இருவரும் நடனம் ஆட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar