கம்பஹரேஸ்வரர் கோவிலில்1008 பரத கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2024 07:01
தஞ்சாவூர் ; கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோவிலில் ஆயிரத்து 8 பரத கலைஞர்கள் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
திருபுவனத்தில் சர்பத் தலமாக விளங்கும் அறம் வளர்த்த நாயகி உடனாய கம்பஹரேஸ்வரர் கோவிலில் பிப்ரவரி 2ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, சோழர் கால பரதக் கலையைப் போற்றும் வகையில் தருமபுரம் ஆதீனம் இசைக்கல்லூரி சார்பில் கோயில் வளாகத்தில் நேற்று மாலை ஆயிரத்து 8 பரதக் கலைஞர்கள் விநாயகர், தேவாரம், லலிதாம்பாள் உள்பட 6 பாடல்களுக்கு சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து நடனமாடினர். இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இச்சாதனையைப் பெருமைப்படுத்தும் வகையில் தருமை ஆதீன இசைக்கல்லூரிக்கு தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.