சித்தி விநாயகர் கோவிலில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2024 05:01
கோவை; சாய்பாபா காலனி கே. கே. புதூர் கோ - ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் தை மாதம் மூன்றாவது புதன் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.