பதிவு செய்த நாள்
02
பிப்
2024
05:02
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உப கோயிலான ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இதற்கு முன்பு 2000ம் ஆண்டில் நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் புதனன்று நன் மங்கல இசை, கணபதி பூஜை, முதற்கால வேள்வி நடந்தது. இரண்டாம் நாள் வியாழன் காலை கனி, கிழங்கு, மூலிகை உள்ளிட்ட பல்பொருள் வேள்வி நடந்தது. அன்று மாலை மூன்றாம் கால வேள்வி நடந்தது. பேரொளி வழிபாடு திருமறை திருமுறை விண்ணப்பம் திருநீறு திருவமுது வழங்குதல் நடந்தது. நேற்று காலை நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் ஞானத் திரு உலா, மூலவர் விமானம் மற்றும் திருச் சுற்று தெய்வங்கள் விமானங்கள், திருக்குட நன்னீராட்டுதல் நடந்தது. இதனைத் தொடர்ந்து காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு திருநீறு, திருவமுது வழங்குதல் நடந்தது. மூலவர் பெருந்திரு நன்னீராட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பழநி கோயில் தேவஸ்தானம் சிவஸ்ரீ அமிர்தலிங்க குருக்கள், சிவஸ்ரீ செல்வ சுப்பரமண்ய குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன் சத்யா, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் பாலு, கவுன்சிலர் அம்சநிவேதா, தொப்பம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் தங்கம், நகர அவைத்தலைவர் சோமசுந்தரம், ஆராதனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.