பதிவு செய்த நாள்
06
பிப்
2024
07:02
திருப்பதி; சனாதன தர்மம் காக்க திருமலை திருப்பதியில் மாபெரும் இந்து சமய சனாதன தர்ம மாநாடு நடைபெற்று வந்தது. மூன்று நாட்கள் நடைபெற்று வந்த மாநாடு நேற்று நிறைவு பெற்றது. கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
திருமலை திருப்பதியில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் மாபெரும் இந்து சமய சனாதன தார்மீக மாநாடு 3ம் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் நிறைவு நாளான நேற்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கருணாகர் ரெட்டி கூறியதாவது; மாநாடு நடைபெற்று வரும் ஆஸ்தானமண்டப வளாகத்தில் இரண்டு நாட்களாக மகான்களின் ஆசியும், அமிர்தத் துளிகளும் தர்ம மழையாகப் பொழிவதை உணரமுடிகிறது. ராமானுஜாச்சாரியார், பூபிரட்டி, திருமலை நம்பி, அனந்தாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், சாமவை, ராணி பராந்தகாதேவி, வீர நரசிங்கதேவ ராயுலா, சந்திரசேகர் ஸ்வாமி, பிரபுபாதர் போன்றோரின் திருநாமங்களைச் சொல்லி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மனநிறைவு தருகிறது. தொடர்து மக்களிடையே இந்து தர்மத்தை எடுத்து செல்லும் பணியாட்களாக செயல்படுவோம் என்றார். கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதன்படி, வேற்று மதத்தவர்கள் கூட, அவர்களின் விருப்பப்படி இந்து மதத்தை தழுவலாம். திருமலையில் புனித நீர் தெளித்து இந்து மதத்திற்கு வரவேற்கலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திருமலையில் ஒரு இடம் ஒதுக்கப்படும். அப்படி இந்து மதத்தை தழுவியவர்களுக்கு ஏழுமலையானின் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். திருமலை போல் திருப்பதி நகரையும் ஆன்மிக நகரமாக வைத்துக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று நாள் மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பீடாதிபதிகள், மடாதிபதிகள் கலந்து கொண்டனர்.