பதிவு செய்த நாள்
09
பிப்
2024
04:02
திருப்புவனம்; காசியை விட வீசம் பெரியது என அழைக்கப்படும் புண்ணிய ஸ்தலமான திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர்.
மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் வழங்குவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்தில் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி புஷ்பவனேஷ்வரரை வழிபட இந்துக்கள் பலரும் வந்து செல்கின்றனர். தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் வழங்க வந்திருந்தனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக போலீசார் நான்கு ரத வீதிகளிலும் டூவீலர்கள், கார்களை அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் சிரமமின்றி திதி, தர்ப்பணம் வழங்கி வழிபட்டு சென்றனர். திதி, தர்ப்பணம் வழங்க வருகை தரும் பக்தர்களிடம் சிவகங்கை தேவஸ்தானம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பக்தர்கள் அமர்ந்து திதி, தர்ப்பணம் வழங்க எந்த ஏற்பாடுகளும் இல்லை. வைகை ஆற்றினுள் குப்பைகளுக்கு நடுவில் பக்தர்கள் அமர்ந்து திதி, தர்ப்பணம் வழங்கினர். பக்தர்கள் விட்டுச் சென்ற குப்பைகளை சுத்தம் செய்ய கூட தேவஸ்தானம் சார்பில் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து திதி, தர்ப்பணம் வழங்கி சென்றனர்.