போடி; தை அமாவாசையை முன்னிட்டு போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர். காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.
* மேலச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.
* போடி அருகே மரக்காமலை சன்னாசிராயர் கோயிலில் சன்னாசி ராயருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சன்னாசிராயரின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
* பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.