பதிவு செய்த நாள்
19
பிப்
2024
12:02
திருப்பதி; ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் மிகவும் பழமையான வாயு லிங்கேஸ்வர திவ்ய க்ஷேத்ரம் ஆகும் இந்நிலையில் கடந்த ஆண்டு மழைக்காலத்தில் இக்கோயிலில் மேல் கூரையில் இருந்து மழைநீர் கசிவு அதிகமாக இருந்ததால், புனேவைச் சேர்ந்த திருமதி. உத்தரா தேவி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் பி.வெங்கடேஸ்வரராவ், கசிவைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள தனது சொந்த நிதியில் புனேவில் உள்ள தொல்லியல் துறையின் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஜம்பவத்து வழிகாட்டுதலின் கீழ் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி நாகேஸ்வரராவ் மற்றும் கோயில் பொறியியல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் உத்தரா தேவி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் பி.வெங்கடேஸ்வரராவ், தனது குடும்பத்தினருடன் கோயிலில் ஞானப்பிரசூனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள தஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.
இதுகுறித்து, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கூறியதாவது: கோயிலில் கடந்த மழைக்காலத்தில், கோவிலுக்குள் அதிகளவில் மழைநீர் கசிவு ஏற்பட்டது. இது குறித்து ஆட்சிக்குழு கூட்டத்தில், கசிவை கட்டுப்படுத்த தேவஸ்தானம் நிதி வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.பழமை வாய்ந்த கோவில்களை பாதுகாக்கும் வகையில் புனிவை சேர்ந்த ஸ்ரீமதி. உத்தரதேவி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் மூன்று கோடியே அறுபது லட்சம் தங்களின் சொந்த நிதியிலிருந்து பழமை வாய்ந்த கோயில்களை காப்பாற்றும் வகையில் கான்கிரீட் அமைப்பது மட்டுமின்றி, ஸ்படிகம் வெல்லம், சுண்ணாம்பு, கரக்காய்,மணல் கலவையுடன் கூடிய பணி நேற்று 18ம் தேதி துவங்கியது. அதேபோன்று, கசிவைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் ஆராயப்பட்டது. இதேபோல், கடந்த காலங்களில் பல பழமையான கோவில்களை புனரமைத்துள்ளனர், எனவே இதற்கு தேவஸ்தான பொறியியல் துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கசிவு தடுப்பு பணிகள் நிறுத்தப்பட்டாலும் நண்பர் முனிரத்னம் ரெட்டி மூலம் இப்பணிகள் முடிக்கப்படும் என்றார். ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமிகள் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு நன்றி தெரிவித்தார். இந்த கசிவை கட்டுப்படுத்தினால் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு கசிவு இருக்காது, நமது கோவிலும் பலமாக இருக்கும் என்றார். இத்திட்டத்தை விரைவில் முடித்து, ஆறு மாதங்களுக்குள், கோவிலின் மேற்பகுதி முழுவதும் முழுமையாக சீரமைக்கப்படும் என்றார். இதற்காக 6 அங்குல வேஸ்ட் மெட்டீரியல் அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சியில், தேவஸ்தானத் துறை அதிகாரிகள் உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், செயற்பொறியாளர் நூகரத்னம்மா, புனேவைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.