பதிவு செய்த நாள்
19
பிப்
2024
12:02
சிதம்பரம்; சிதம்பரம் முத்தையாநகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக சாதனையாக, உலக நன்மை வேண்டி கோடி அர்ச்சனை நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் கோடி அர்ச்சனையில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு சித்தர் பீட நிர்வாகிகள் சித்த மருத்துவர் அர்ச்சுனன், அருளானந்தன், பேராசிரியர்கள் பாலக்குமார், ஞானக்குமார் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர்கள் முகமதுயாசின், துணை நிலை ஆளுநர் தீபக்குமார், மக்கள் மருந்தகம் கேசவன், ஆய்வாளர் மணிவண்ணன், வீரக்குமார், கோவிந்தன், கார்த்திராஜா உள்ளிட்டோர் கோடி அர்ச்சனையில் பங்கேற்றனர். கோடி அர்ச்சனை முடிவுற்ற பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சித்தர் பீடத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.