அன்னையின் 146 வது பிறந்த நாள்; அரவிந்தர் மற்றும் அன்னை அறை தரிசனத்திற்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2024 02:02
புதுச்சேரி; அன்னையின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு அரவிந்தர் மற்றும் அன்னை அறையை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அன்னை என்று அழைக்கப்படும் மிர்ரா அல்ஃபாஸா 1878 ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். அரவிந்தரின் யோக முறைகள் இவரைக் கவர்ந்ததால் இந்தியா வந்தார். அரவிந்தர் வாழ்ந்த புதுச்சேரியிலேயே தங்கி அவரது ஆன்மிக, யோகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் என்ற சர்வதேச நகரை உருவாக்கினார். மேலும் அரவிந்தர் ஆசிரமத்தில் வாழ்ந்த அன்னை 1973 ஆம் ஆண்டு நவ.17ஆம் தேதி மகா சமாதி அடைந்தார்.அதையொட்டி நாளை அன்னையின்146 வது பிறந்த நாளை முன்னிட்டு அரவிந்தர் மற்றும் அன்னை அறையை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் பிப். 29ஆம் தேதி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் (லீப் இயர்) கோல்டன் டே பொன்னொளி பூமிக்கு வந்த நாள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் புதுச்சேரி மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் காலையில் கூட்டு தியான நிகழ்ச்சி நடக்கிறது அதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் அன்னை, அரவிந்தர் அறையை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அன்னையின் பிறந்தநாள் மற்றும் கோல்டன் டே தினத்தன்று மட்டும் அன்னை, அரவிந்தர் அறைகளை ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.