பண்டிதப்பட்டு காமாட்சியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2024 04:02
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில். இக்கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் இன்று கால யாக பூஜையை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு குருக்கள் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.