சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2024 02:02
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம் நடந்தது. குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட இக்கோயிலின் மாசிமகத் திருவிழா பிப். 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு சுவாமி அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 3:30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தேரோட்டத்தை துவக்கி வைத்தார். விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேர்களில் முன்னே செல்ல, பெரிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்கள் சென்றது. வழி நெடுகிலும் பெண்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.