ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பிப்.21 முதல் 24 முடிய 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கோயிலில் இன்று பிப். 24ல் பவுர்ணமி வழிபாடும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை முதல் ஏராளமான பக்தர்கள் சதுரகிரியில் குவிந்தனர். நீண்டநேரம் காத்திருந்து பக்தர்கள் சுந்தர மகாலிங்கம் சுவாமி தரிசனம் செய்தனர்.