அவிநாசி காரணபெருமாள் கோவிலில் மாசி மகம் மற்றும் கவ்வாளம் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2024 04:02
அவிநாசி; அவிநாசி ஸ்ரீதேவி பூமாதேவி சமேத காரணப்பெருமாள் கோவிலில் மாசி மகம் தேர் மற்றும் கவ்வாளம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அவிநாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீ காரணப் பெருமாள் கோவிலில் மாசி மகம் தேர் மற்றும் கவ்வாளம் விழா கடந்த 18ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் பின்னர் 23ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று ஸ்வாமி திருத்தேருக்கு எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (ஞாயிறு) பரிவேட்டை, கவ்வாளம் உற்சவம், கருட வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா காட்சி மற்றும் திங்கள் மஞ்சள் நீர் விழாவுடன் மாசி மகம் தேர் மற்றும் கவ்வாளம் விழா நிறைவு பெறுகிறது.