பதிவு செய்த நாள்
24
பிப்
2024
04:02
கடலூர் ; கடலுார் மாவட்டம், கிள்ளை முழுக்குத்துறையில் மாசி மக திருவிழாவையொட்டி, இன்று ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பூவராக சுவாமி தைக்கால் மாரியம்மன் கோவிலில் எழுந்தருளினார்.
காலை பூவராக சுவாமி, கிள்ளை தைக்கால் தர்கா வழியாக தீர்த்தவாரிக்கு, முழுக்குத்துறை கடற்கரைக்கு சென்றார். அப்போது, காலை தைக்கால் சையத் ஷா ரஹகமத்துல்லா தர்காவில், பாரம்பரிய முறைப்படி பூவராக சுவாமிக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஹிந்து முறைப்படி, தாம்பூல தட்டில் பழம், அரிசி, பட்டு சாத்தி, சுவாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி நிர்வாகம் சார்பில் நாட்டு சர்க்கரையும், மாலையும் தர்கா நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் பல ஆண்டுகாலமாக இந்த நிகழ்வு நடைபெற்று வருவது குறிபிடத்தக்கது.