பதிவு செய்த நாள்
26
பிப்
2024
11:02
பந்தலூர்; பந்தலூர் அருகே அய்யன்கொல்லி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 25 ம் தேதி கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து மாலை தட்டாம்பாறை மாரியம்மன் கோவிலில் இருந்து, நெற்றி பட்டம் கட்டிய யானையுடன், செண்டை மேளம், நாதஸ்வரம், அம்மன்குடம், தேவரூபம், கரகாட்டம்,ஆதிவாசி மேள வாத்தியங்களுடன், அம்மன் கோவில் வந்தடைந்தது.
திருவாதிரை கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை, உஷ பூஜை, கஜபூஜை, அன்னதானத்துடன் தட்டம் பாறை ராஜூ மாஸ்டர் வீட்டிலிருந்து, உண்டியல் ஊர்வலம் வெற்றி பட்டம் கட்டிய யானை , செண்டை மேளம் பழங்குடியின இசை வாத்தியம், மற்றும் கரகாட்டம், கைதட்டி ஆட்டம், மாவிளக்கு தட்டுடன் ஊர்வலம் அம்மன் கோவிலை சென்றடைந்தது. இதில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட ராணி என்ற யானையிடம், பக்தர்கள் ஆசிர்வாதம் பெற்றனர். தொடர்ந்து கோவிலில் அன்னதானம் மேலும் மதிய பூஜை அதனைத் தொடர்ந்து வாளாட்டு ஸ்ரீ மகா விஷ்ணு கோவில், மற்றும் பாலமுருகன் கோவில், ஐயப்பன் கோவில் பகுதிகளுக்கு யானையுடன் பக்தர்கள் சிறப்பு ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து இரவு அன்னதானம் மற்றும் ஆதிவாசிகள் நடனம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் இன்று அதிகாலை, ஆழி பூஜை மற்றும் மஞ்சள் நீராட்டு, சாமி அருள்வாக்கு கூறுதலுடன் விழா நிறைவு பெற்றது. திருவிழாவில் பழங்குடியினர் உள்ளிட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மன் அருள் பெற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு, திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.