பரமக்குடி டூ திருச்செந்தூர் சைக்கிள் யாத்திரை; 300 பக்தர்கள் பயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2024 11:02
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் இருந்து 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் சைக்கிளில் திருச்செந்தூர் யாத்திரை தொடங்கினர்.
இக்கோயிலில் 48வது ஆண்டாக செந்தில் ஆண்டவன் மிதிவண்டி பயண குழு, குருவடியார் சுப.இலக்குமணன் தலைமையில் நேற்று காலை சென்றனர். பிப்., 22 துவங்கி சண்முகார்ச்சனை, திருவிளக்கு வழிபாடு, பால்குட விழா, அன்னதானம் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு சைக்கிள் யாத்திரையில் கொடி வணக்கம் நடந்து, 9:00 மணிக்கு கோயிலில் இருந்து பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக சைக்கிளில் திருச்செந்தூர் பயணத்தை துவக்கினார். இவர்கள் பிப்., 29 ல் திருச்செந்தூர் கோயிலை அடைந்து அங்கு பால் குடங்களை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் மார்ச் 2 அன்று தரிசனம் முடிந்து மீண்டும் பரமக்குடியை அடைய உள்ளனர்.