500 ஆண்டுகள் பழமையான வையம்மாள் சடச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2024 11:02
காரியாபட்டி; காரியாபட்டி வையம்பட்டியில் வையம்மாள் சடச்சியம்மன் கோயில் உள்ளது. கிராம தெய்வமாக இருக்கும் இக்கோயில், 500 ஆண்டுகளுக்கு முன் குழந்தை வடிவில் தோன்றியது. ஊருக்கு அருகே கண்மாய் கரையில் வையம்மாள் சடச்சியம்மன் சுவாமியை வணங்கி வருகின்றனர். கை, கால்
அசைவின்றி, நடக்க முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இக்கோயிலில் வழிபட்டு சென்றால் உடல் நலம் தேரி, குழந்தைகள் நடக்கின்றனர். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானவர் இக்கோயிலுக்கு வந்து செல்வர். குணமடைந்து பின் நேர்த்திக்கடன் செலுத்த வருவோரின் கூட்டம் அதிகமாக இருக்கும். நேர்த்திக்கடனாக தள்ளு வண்டியை வைப்பர். மிகவும் பிரசித்தி பெற்ற 500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. மங்கல இசையுடன் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மண்டப சாந்தி, ஜெப பாராயணம், மகாபூர்ணா ஹூதி முடிந்து புனித நீர் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டு கோபுர கலசத்தில் ஊத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வையம்பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.