பதிவு செய்த நாள்
27
பிப்
2024
03:02
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், மாசி பிரம்மோற்சவம் 15ம் தேதி துவங்கியது. பிரம்மோற்சவத்தின் நிறைவாக, நேற்று அதிகாலை, தியாகராஜ சுவாமி பந்தம் பறி உற்சவம் - 18 திருநடனம் நடைபெற்றது. அதன்படி, தியாகராஜ சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் பிரமாண்ட தொட்டியில் எழுந்தருளினார். தனி சப்பரத்தில், வடிவுடையம்மன் எழுந்தருளி மாடவீதி உலா வந்தார். பின், சன்னதி தெருவில் உள்ள, அகத்தீஸ்வரர் கோவில் முன், தியாகராஜ சுவாமியிடம், திருவிழா வரவு - செலவு கணக்குகளை படித்து காண்பிக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளா கத்திற்குள் வந்த தியாகராஜ சுவாமி, வசந்த தீர்த்தகுளத்தை சுற்றி ஒன்பது முறை திருநடனம் புரிய, வடிவுடையம்மன் எதிர்சேவை புரிந்தார். பின், வடிவுடையம்மன் சன்னதி வெளியே , தெற்கு முகம் நோக்கி எழுந்தருள, தியாகராஜ சுவாமி வடக்கு முகம் நோக்கி, ஒன்பது முறை திருடனம் புரிந்தார். இந்நிகழ்வுடன், மாசி பிரம்மோற்சவம் நிறைவுற்றது.