300 ஆண்டு பழமையான வீரமாஸ்த்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2024 04:02
சிறுமுகை; இரும்பறை கிராமத்தில் 300 ஆண்டு பழமையான வீரமாஸ்த்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
சிறுமுகை அருகே உள்ள இரும்பறை கிராமத்தில் 300 ஆண்டு பழமையான வீரமாஸ்த்தி அம்மன் கோவில் உள்ளது. இங்கு திருப்ணி செய்யப்பட்டு கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகள் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.