பட்டத்தரசி அம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா; தீர்த்த குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2024 05:02
அவிநாசி; அவிநாசி அடுத்த பெரியாயி பாளையத்தில் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அவிநாசி ஒன்றியம் பலங்கரை ஊராட்சிக்குட்பட்ட பெரியாயிபாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவிலில் கடந்த 20ம் தேதி பொரி மாற்றுதல் நிகழ்ச்சியுடன் பொங்கல் பூச்சாட்டு விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து சென்றனர். நாளை கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலையில் விளக்கு மாவு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது.