காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2024 06:02
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி இன்று பூச்சொரிதல் விழா நடந்தது.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி பால்குடத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வாண்டு 68 வது மாசி பங்குனி திருவிழா மார்ச் 12 ஆம் தேதி கணபதி பூஜை, கொடியேற்றும் மற்றும், காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. மார்ச் 19 ஆம் தேதி கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 20 ஆம் தேதி காலை முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலையில் கரகம் பருப்பூரணியில் சேர்க்கும் நிகழ்ச்சியும், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மார்ச் 21 இரவு அம்மன் திருவீதி உலாவும் 22 ஆம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி இன்று பூச்செரிதல் விழா நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தினர்.