பழநி, : பழநி முருகன் கோயிலில் உப கோயிலான கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.
பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா பிப் .9ல் மூகூர்த்தகால் நட துவங்கியது. பிப். 13 ல் கோயில் முன் கம்பம் , பிப். 20 கொடியேற்றம் நடைபெற்றது. பக்தர்கள் கம்பத்திற்கு பால், பன்னீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.பிப்.21ல் அடிவாரம் குமாரசத்திரம் அழகு நாச்சியம்மன் திருக்கல்யாணம், நேற்று மாலை 4:30 மணிக்கு பொட்டும், காரையும் கொண்டு வருதலுடன் இரவு மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை 4:30 மணிக்கு திருத்தேரோட்டம், இரவு வண்டி கால் பார்த்தல் நடக்கிறது.