சோமனூர்; மாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடும் விழா நடந்தது.
சோமனூர் அடுத்த ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில், கடந்த, 20 ம்தேதி பூச்சாட்டு திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு அக்னி கம்பம் நடும் பூஜை நடந்தது. வரும், மார்ச் 5 ம்தேதி வரை பக்தர்கள் தினமும் கம்பம் சுற்றி ஆடுவர். நேற்று காலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பக்தர்கள் பூவோடு எடுத்து ஆடினர். வரும், மார்ச் 4 ம்தேதி விநாயகர் மற்றும் கருப்பராயன் பொங்கலும், 6 ம்தேதி அம்மனுக்கு திருக்கல்யாணமும், பொங்கல் விழாவும் நடக்கிறது.