திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நித்ய அன்னதான திட்டம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2024 11:03
திருப்பதி; திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோவிலில் நித்ய அன்னதான திட்டத்தை திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர ரெட்டி, செயல் அதிகாரி ஏவி தர்மா ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஸ்ரீ கோவிந்த ராஜசுவாமி கோவிலில் நேற்று முதல் தினமும் இரண்டாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் நித்ய அன்னதான திட்டத்தின் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர ரெட்டி கூறியதாவது; கடந்த காலங்களில், நான் திருப்பதி தேவஸ்தான ஆட்சி மன்றத் தலைவராக இருந்தபோது, திருமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதே சமயம் திருச்சானூர் பத்மாவதி அம்மாவாரி கோவிலில் நித்யநதான நிகழ்ச்சியையும் தொடங்கினோம். திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமி கோவிலில் இந்த நாளில் நித்ய அன்னதான திட்டத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. இங்கு தினமும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்னதான திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவோம் என்று கூறினார்.