கோவையில் தியாகராஜ சுவாமி 53ம் ஆண்டு விழா; மும்மூர்த்திகள் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2024 11:03
கோவை; சத்குரு ஸ்ரீ தியாகராஜா டிரஸ்ட் சார்பில் தியாகராஜ சுவாமிகளின் 53வது ஆண்டு விழா மற்றும் மும்மூர்த்திகள் உற்சவம் கோவை ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் கடந்த 28ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வானது வரும் 04ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் மற்றும் ஸ்ரீ முத்துசுவாமி தீட்ஷதர் மற்றும் சியாமா சாத்திரிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.