சோமனூர்; ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சோமனூர் அடுத்த ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, பூச்சாட்டு மற்றும் திருக் கல்யாண திருவிழா, பிப்., 20 ம்தேதி துவங்கியது. 27 ம்தேதி கம்பம் நடப்பட்டு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் பூவோடு எடுத்து ஆடுதலும் நடந்தது. கடந்த, 4 ம்தேதி விநாயகர் மற்றும் கருப்பராயன் பொங்கல் வைக்கப்பட்டது. இன்று காலை, அம்மன் அழைத்தல் மாவிளக்கு எடுத்தலும் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் நேர்த்தி கடன் செலுத்தினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.