Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரியில் சிவாலய ஓட்டம்; 12 ... மகா சிவராத்திரி; ஆதி வாலீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் மகா சிவராத்திரி; ஆதி வாலீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை ஆலந்துறையப்பர் கோயிலில் மகா சிவராத்திரி விழா; விபூதி பெற்று சென்ற பிரான்ஸ் நாட்டினர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை ஆலந்துறையப்பர் கோயிலில் மகா சிவராத்திரி விழா; விபூதி பெற்று சென்ற பிரான்ஸ் நாட்டினர்

பதிவு செய்த நாள்

08 மார்
2024
01:03

மயிலாடுதுறை; மன்னம்பந்தல் ஆலந்துறையப்பர் சுவாமி கோயிலில் 25ம் ஆண்டு மகா சிவராத்திரி பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அஞ்சல்நாயகி சமேத ஆலந்துறையப்பர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மராட்டிய மன்னன் சரபோஜி அமாவாசை தினத்தன்று பந்தல் அமைத்து சாபதோஷம் நீங்க சிவபூஜை செய்த தலம். இக்கோயிலில் 25-ம் ஆண்டு மகா சிவராத்திரி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவில், மன்னம்பந்தல் நடன விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், அழகு காவடி எடுத்துச் சென்றனர். யானை, குதிரை ஆகிய மங்கள சின்னங்கள் முன்செல்ல சுவாமி,, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலாவாக கோயிலை வந்தடைந்தனர்.  இதில், ஏராளமான சிறார்கள் சிலம்பாட்டம் ஆடியபடியும், நாட்டுப்புற கலைஞர்கள் சிவன், அம்பாள் வேடமணிந்தும், சிவகயிலாய வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற வீதியுலாவில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர்.  இந்த நிகழ்வுகளை அவ்வழியாக சுற்றுலா பேருந்தில் வந்த பிரான்ஸ் நாட்டினர் சிலர் ஆர்வமுடன் தங்கள் செல்போனில் படம் பிடித்ததுடன், விபூதி பிரசாதம் பெற்றுச்சென்றனர்.  தொடர்ந்து, கோயிலில் சுவாமி அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. தொடர்ந்து திருமுறை பாராயணம், பன்னிரு திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், சிவராத்திரியின் நான்கு கால சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar