Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை ... திருப்பதியில் மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை விழா திருப்பதியில் மகாதேவேந்திர சரஸ்வதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏனாதி செங்கோட்டை அங்காளபரமேஸ்வரி கோவிலில் மாசிக்களரி விழா
எழுத்தின் அளவு:
ஏனாதி செங்கோட்டை அங்காளபரமேஸ்வரி கோவிலில் மாசிக்களரி விழா

பதிவு செய்த நாள்

11 மார்
2024
12:03

மானாமதுரை; மானாமதுரை அருகே ஏனாதி செங்கோட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மாசி களரி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மானாமதுரை அருகே உள்ள ஏனாதி செங்கோட்டை கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருடம் தோறும் மாசி களரி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டிற்கான விழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.இதை எடுத்து தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடந்த 8ம் தேதி 108 திருவிளக்கு பூஜையும், வைகை ஆற்றிலிருந்து கரகம் எடுத்து வந்து பச்சை வாழை பரப்பி பூஜையும், 9ம் தேதி கோயில் அருகே பல்வேறு கிராமத்தினர் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளுக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நேற்று நடைபெற்ற பாரிவேட்டை நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மன் கோமாளி கூட்டம் வேடுவர் வேடம் பூண்டு அம்மன் பாரி வேட்டைக்கு சென்று திரும்பி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று 11ம் தேதி ஆடு, கோழிகளை பலிட்டு பொங்கல் வைக்கும் விழா நடைபெறறது. விழாவில் சிவகங்கை, மதுரை,  ராமநாதபுரம்,விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானிகர் சண்முகசுந்தரம் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு சிவகங்கை,மானாமதுரையில்ருந்து ஏனாதி செங்கோட்டைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar