Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏனாதி செங்கோட்டை அங்காளபரமேஸ்வரி ... திருப்பதி தரிசன விதிகளை தேவஸ்தான முன்னாள் குழு உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும்; பூமனா கருணாகர் ரெட்டி திருப்பதி தரிசன விதிகளை தேவஸ்தான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை விழா

பதிவு செய்த நாள்

11 மார்
2024
12:03

திருப்பதி; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 67வது பீடாதிபதியான ஜகத்குரு பூஜ்யஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆராதனை திருப்பதி ஸ்ரீமடத்தில் சங்கர விஜயேந்திர சரஸ்வதிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.

காஞ்சி சங்கராச்சாரியார்களின் பரம்பரையில் அறுபத்தி எட்டாவது பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை மகாப் பெரியவா என்று அழைக்கிறோம், நடமாடும் தெய்வமாகவே வாழ்ந்தவர் அவர். அறுபத்தி ஐந்தாவது பீடாதிபதியான ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் மகா பெரியவாவின் பரமோஷ்டி குரு இவரும் மாபெரும் மகானாக வாழ்ந்தவர். மத்யார்ஜுன சேத்திரம் என அழைக்கப்படும் திருவிடைமருதூர் என்ற ஸ்தலத்தில் இவர் அவதரித்தார். பாரத தேசத்தின் பல பாகங்களிலும் விஜயம் செய்து அருள்பாலித்த சுவாமிகள் இளையாற்றங்குடி என்னும் சேத்திரத்திற்கும் வந்தார். அவரால் இத்தலம் சிறப்புடன் விளங்கியது. இவருக்கு முன் காமகோடி பீடத்தில் பிரகாசித்து வந்த அறுபத்தி நான்கு ஆச்சார்யர்களையும் குறித்த குருபரம்பரா ஸ்தோத்திரத்தை இங்கு இயற்றினார். விரோதி வருஷம் பங்குனி மாதம் எட்டாம் தேதி அமாவாசை (தர்ச தினம்) (20.3.1890) குரு வாரம்  கைலாச நாதனுடைய சன்னதியில் அகண்டாகார பிரம்மசைதன்யன் ஆனார். ஒவ்வொரு வருடமும் மாசி அமாவாசை நாளில்  மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திருப்பதி ஸ்ரீமடத்தில் சங்கர விஜயேந்திர சரஸ்வதிகள் முன்னிலையில் மகாதேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar