Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கமுதி முத்துமாரியம்மன் கோயில் ... முத்துமாரியம்மன் கோயிலில் மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் முத்துமாரியம்மன் கோயிலில் மண்சோறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

15 மார்
2024
04:03

பெரியகுளம்; பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

இக்கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் தனித்தனி சன்னதியில், தலா ஒரு கொடிமரம் அமைந்துள்ளது விசேஷமானது. கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று ‌(மார்ச் 15) கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 24 வரை 10 நாட்கள் திருவிழா நடக்கும். முக்கிய திருவிழாவான தேரோட்டம் மார்ச் 23 ல் நடக்கிறது. கொடியேற்றத்தின் போது ஹோமம் பூஜைகள் நடந்தது. ராஜேந்திர சோழீஸ்வரர் (சிவன்) வாகனமான ரிஷபம் கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்தில் விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. புனித நீர் ஊற்றி உற்சவ மூர்த்திகளான விநாயகர், சண்டிகேஸ்வரர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, வள்ளி தேவசேனோ பாலசுப்பிரமணியருக்கு தீபாராதனை நடந்தது. திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கும். திருப்பணி குழுவினர்கள் ஜெயபிரதீப், சசிதரன், சிதம்பரசூரியவேலு, சிவனடியார்கள் அறக்கட்டளை தலைவர் குணசேகரன், செயல் அலுவலர் ஹரிஷ் குமார், உபயதாரர்கள் சவுந்திரபாண்டியன், திரிசங்கு, கோபிக்கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar