Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடையநல்லூர் கோயிலில் நாளை ... மாரியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் துவக்கம்! மாரியம்மன் கோவில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஷ்வரருக்கு அன்னாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 அக்
2012
10:10

அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு, நேற்று அன்னாபிஷேகம் நடந்தது.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது, கங்கைகொண்ட சோழபுரம். 11ம் நூற்றாண்டு முதல், 14ம் நூற்றாண்டு வரை, கடல் கடந்து பரந்து விரிந்திருந்த, சோழ பேரரசின் தலைநகராக விளங்கியது.

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன், தனது ஆட்சி காலத்தில் (கி.பி. 1012-1044), கங்கை கரை வரை படையெடுத்து சென்று, வடபுலத்து மன்னர்களை வெற்றி கொண்டதன் அடையாளமாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி, அங்கு தஞ்சாவூர் பெரிய கோயில் வடிவமைப்புடன் கூடிய, பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார்.இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட, சிவலிங்கம் தான், உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றி வணங்கப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கருவறை சுவரில் பதிக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கல், வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், மழை மற்றும் குளிர் காலத்தில் இதமான வெப்பத்தையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா., சபையின், "யுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், தொன்றுதொட்டு ஐப்பசி பவுர்ணமி நாளில் நடந்து வந்த அன்னாபிஷேகம், இடையில் நின்றுவிட்டது. 27 ஆண்டுகளுக்கு முன், மீண்டும் அன்னாபிஷேகம் துவக்கி வைக்கப்பட்டது.அதன்படி, கும்பகோணம் சங்கரமடம் மற்றும் அன்னதான கமிட்டி சார்பில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட, 100 மூட்டை அரிசியை கொண்டு, கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில், சாதம் வடிக்கப்பட்டது.

காலை, 10:00 மணிக்கு துவங்கி, பிரமாண்டமான பாய்லர்களில் வடிக்கப்பட்ட சாதம் முழுவதும், பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டது. மாலை, 4:00 மணி வரை நடந்த அன்னாபிஷேகத்தை தொடர்ந்து, சுவாமிக்கு மலர் மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை செய்யப்பட்டது. இத்தாலி நாட்டிலிருந்து வந்த சுற்றுலா பயணிகளும், அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் உற்சவர் பிரதிஷ்டை அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar