சென்னிமலை: சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த, 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நவம்பர் முதல் தேதியில் பொங்கல் விழா நடக்கிறது. சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதம், 15 நாள் விழாவாக கொண்டாடப்படும். இந்தாண்டு பொங்கல் விழா கடந்த, 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.கடந்த, 24ம் தேதி இரவு கம்பம் நடுதல் விழா நடந்தது. அதை தொடந்து தினமும் காலை "பூ வோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. தினமும் இக்கம்பத்துக்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு நடத்துகின்றனர். காலை ஆறு முதல் மதியம் வரை பெண்கள் தொடர்ந்து கம்பத்துக்கு மஞ்சள் பூசி, மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு நடத்துகின்றனர். வரும், 31ம் தேதி புதன்கிழமை மாவிளக்கு, திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.நவம்பர் முதல் தேதி காலை பொங்கல் விழா நடக்கிறது அன்று பொதுமக்கள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சேவல், கிடாய் பலி கொடுத்து பூஜை நடத்துவர். அடுத்த நாள் பகல் மஞ்சள் நீர் உற்சவத்துடன் பொங்கல்விழா நிறைவு பெருகிறது.ஏற்பாடுகளை கோவில் தக்கார் வில்வமூர்த்தி, செயல்அலுவலர் பசவராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.