நெல்லையப்பர் கோயிலில் பக்தர் மூங்கில் காட்டில் சுவாமி காட்சியளித்த வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2024 11:03
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ராமக்கோனுக்கு சிவபெருமான் காட்சியளித்த வைபவம் நடந்தது. சிவபெருமானின் திருவிளையாடலை நினைவில் கொள்ளும் வகையில் நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்திருவிழாவின் 4ம் நாளில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கும். இதையொட்டி கோயிலில் தாமிரசபை பிரகாரம் அருகே தல விருட்சம் மூங்கில் மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு கோடாரியால் வெட்டிய நிகழ்வை அறிவுறுத்தும் வகையில் நேற்று பகலில் ராமக்கோன், பாண்டிய மன்னருக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவம், சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இரவு ரிஷப வாக னத்தில் சுவாமி, அம்பாள், சந்திரசேகர், பவானி அம்பாள், சண்டிகேஸ்வரர், ராமக்கோன், பாண்டிய மன்னர் வீதியுலா நடந்தது.