மதுரை சித்திரை திருவிழா; வரும் ஏப்.23ல் ஆற்றில் இறங்கிறார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2024 03:03
மதுரை ; மதுரையில் வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றாலும் மிகவும் பிரசித்தி பெற்றவை சித்திரை திருவிழாவில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் தான். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்றதுமே நினைவிற்கு வருவது சித்திரை திருவிழா தான். இது சைவ - வைணவ ஒற்றுமையை உணர்த்தும் விழாவாகும். இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 11ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் 21ம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஏப். 22 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் ஏப்ரல் 23ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. இதற்காக ஏப்ரல் 21ல் மலையிலிருந்து புறப்படுகிறார் கள்ளழகர்.