பங்குனி விழா; சிம்ம வாகனத்தில் பரமக்குடி முத்தாலம்மன் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2024 10:03
பரமக்குடி; பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் இரண்டாம் நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி வலம் வந்தார். முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருகிறார். நேற்று முன்தினம் மாலை வெள்ளி சிம்ம வாகனத்தில் பாரதி நகர், வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தார். இன்று காலை காளி அலங்காரமும், மார்ச் 25 இரவு மின் தீப அலங்கார தேரிலும் அம்மன் வலம் வருகிறார்.