பந்தக்கால் நட்டாச்சு; ஆரம்பமானது மதுரை சித்திரை திருவிழா..
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2024 11:03
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா நடந்தது.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவும், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவும் உலகப் புகழ் பெற்றது. மதுரை சித்திரைத் திருவிழா மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்.12ம் தேதி தொடங்கி ஏப்.23ம் தேதி நிறைவடைகிறது. கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.19ம் தேதி தொடங்கி ஏப்.28ம் தேதி நிறைவுபெறுகிறது. இதற்காக இப்பொழுதே மதுரை களைகட்ட துவங்கியுள்ளது. விழாவின் முதல் நிகழ்ச்சியான பந்தக்கால் முகூர்த்தம் இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்றது.