பதிவு செய்த நாள்
20
மார்
2024
01:03
ஆத்துார்; ஆத்துார் சோமநாத சுவாமி கோயில் பங்குனித் திருவிழா 5ம் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சுவாமி அம்பாள் திருவீதிஉலா நடந்தது. இக்கோயில் பங்குனித் திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 5ம் திருநாளான நேற்று காலையில் சுவாமி, அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் வீதிஉலாவும், தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவில் சோமநாதசுவாமி பூங்கோயில் வாகனத்திலும், சோமசுந்தரி அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதிஉலா நடந்தது. ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்களான ஆத்துார் கோயில் பிச்சைகட்டளை, சீனிவாசபாண்டியன், சிற்பி ஸ்ரீதர், ஸ்ரீஓம்சுதர்சனன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பூஜை நிகழ்ச்சிகளில் மேல ஆத்துார் பஞ்., தலைவர் சதீஷ்குமார், ஆத்துார் பேரூராட்சித் தலைவர் கமால்தீன், முன்னாள் பஞ்., தலைவர் முருகானந்தம், கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரி ராம்குமார், முத்து, சிவா, அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இரவில் மகேஸ்வரி மனோகரனின் சமய சொற்பொழிவும், பேராசிரியர் ராசதுரை தலைமையில் பட்டிமன்றமும் நடந்தது. ஏற்பாடுகளை ஆத்துார் வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.