காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு 100 மின் விசிறி காணிக்கை அளித்த பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2024 03:03
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள 100 மின் விசிறிகளை திருப்பதியைச் சேர்ந்த ராயலசீமா ஏஜென்சி உரிமையாளர் உஷா குடும்பத்தினர் காணிக்கை அளித்தனர்.
இது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு கூறியதாவது: கோடை காலத்தில் பக்தர்களுக்காக 100 மின் விசிறிகளை ராயலசீமா ஏஜென்சி தலைவர் உஷா குடும்பத்தினர் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. என்றார். பின்னர், அறங்காவலர் குழு தலைவர் நன்கொடையாளர்களுக்கு சுவாமி, அம்மன் திருவுருவப் படத்தையும், தீர்த்தப் பிரசாதங்களையும் வழங்கினார்.